அரையர் சேவை
அரையர் சேவை என்பதுவைஷ்ணவர்களுக்கே உரிய ஆன்மீக
இசைவடிவம் ஆகும். இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூர், ஆழ்வார் திருநகர் ஆகிய ஊர்களில்
அரையர் சேவை அழிந்து விடாமல் போற்றப்பட்டு வருகிறது.இதை ஆண்கள் தான் ஆடி செய்து வருகிறார்கள்.
ராமானுஜர் காலம் முதல்
பாண்டிய நாட்டிலுள்ள 18 திவ்ய்ய தேசங்களில் அரையர் சேவை நடந்து வருகிறது.
பாசுரங்களை இசையுடன் பாடுவது,பாடல் பொருளை விரித்துரைப்பது, இறைவனின் பெருமைகளை
சொல்லி ஏற்றுவது, பாசுரங்களில் இடம் பெரும் புராணக்கதைகளை நடத்திக்காட்டுவது,
பிரணய கலகம் என்ற ஊடல் திரு நாளில் வாயிலாக இருந்து பெருமாளையும் பிராட்டியையும்
சேர்த்து வைத்தல் போன்ற சேவைகளை அரையர்கள் செய்கின்றனர். இதை ஆடுவது ஆண்கள் தான்.
ஆழ்வார் பாசுரங்களை அரையர் சேவைக்கு முன்பு பண்
இசையில் ஓதுவதில்லை. ‘தேவகானம் என்ற இசை அமைப்பில் தாள ஒலியின்றி
‘உதாப்த்’,
அனுதாத்த’
ஸ்பரிதமாக ஓதி வந்தனர். அரையர்களே பண் தாள வகுப்பிற்கேற்ப திருவாய் மொழி பதிகங்களை
தாளத்துடன் இசைத்தனர். அரையர்களுக்கு ‘இசைக்காரர்’
என்ற பட்ட பெயரும் வழங்கி வந்ததாக அறியப்படுகிறது.
தனிபட்ட ஓர் ஆன்மீக இசை வடிவம் வைஷ்ணவ்த்திற்கே
உரியது. தமிழ் இசை வரலாற்றில் ஆடல், பாடல் , நாடகம் என்ற இவற்றை உள்ளடக்கிய ஒரு
புதுமையான இசை வடிவம் தோன்றி வளர்ந்து பேணிப்பாதுகாக்கப்பட்டு வந்தது பாண்டியர்கள்
காலத்தில் தான்.ஆகையால் தான் இந்த அரையர் சேவை தென் தமிழ் நாட்டு கோவில்களில் இப்போதும் நடைபெறுகிறது.
Comments
Post a Comment