புரஃபசருக்கு ஷாக் அடித்த சம்பவம்
ஒரு முறை (electrical laboratory) எலெகடிரிக்கல் லாபில் (experiment) எஃஸ்பெரிமென்ட் செய்து கொண்டிருந்தோம்.சிங்கருனவஸ் மோட்டார் டெஸ்ட்.(
Synchronuous motor test.). சிங்க்ரொனுவஸ் மோட்டார் என்பது ஒரு குறிப்பிட்ட வேகத்தில் தான் சுற்றும்.
இதை மின் நிலையங்களில் பவர் ஃபாக்டர் சரிபண்ண உபயோகிப்பார்கள்.(used in power plants for the correction of power
factor ).
இந்த பரிசோதனை செய்ய அதன் ஃபீல்ட் வோல்டாஜ் அட்ஜஸ்ட்
பண்ண வேண்டும். ரியோஸ்டாட் ஒரு ரெஸிஸ்டன்ஸை கூட்டவோ குறைக்கவொ உதவும். மோட்டாரை கட்டுபடுத்த ஒரு ரியோஸ்டாட்டை (Rheostat) அட்ஜஸ்ட் செய்ய வேண்டும். நான் ஒரு கைய்யால் ஒரு
பக்கத்தை பிடித்துக்கொண்டு ரியோஸ்டாட்டை அட்ஜஸ்ட் செய்தேன்.
ரியோஸ்டாட்டில் லீக் இருந்தது எனக்கு தெரியாது. அடித்ததே ஒரு பயங்கர
ஷாக். இவ்வளவுக்கும் நான் ஷூ போட்டிருந்தேன். நல்ல ஷாக். ஒரு கையை இன்னொரு
கைய்யால் பிடித்து கொண்டு கொஞ்சம் தள்ளி போய் நின்றேன்.
தூர இருந்து இதை
பார்த்த அஸிஸ்டென்ட் புரஃபசர் குளத்து அய்யர், " எந்தா, எந்தா எந்து பற்றி "
( என்னா என்னா, என்ன ஆயிற்று) என்று கூவிக்கொண்டே அருகில் வந்தார்.
நான் "இல்ல
சார் ஷாக் அடிச்சு, அதாணு" என்றேன். (ஒன்றுமில்லை சார் எனக்கு ஷாக் அடித்தது)
"அவடே ஷாக்
அடிக்கத்தில்லல்லோ" ( அங்கே ஷாக் அடிக்காதே) என்று அவரும் ரியோஸ்டாட்டை நான் தொட்ட இடத்தையே தொட்டார்.
"ஹே"
என்று கத்திக்கொண்டு அவர் கையை அவசரமாக எடுத்தார். அவருக்கும் நல்ல ஷாக்.
(எனக்கு சிரிப்பு பொத்து கொண்டு வந்தது. என் வலி பறந்து போய் விட்டது.
அவர் என்னை
பார்த்து அசட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டு "அது மாற்றி வைச்சிட்டு
, வேறே
ரியோஸ்டாட் எடுத்து டெஸ்ட் கம்ப்லீட் செய்" என்று சொல்லி விட்டு கையை
உதறிக்கொண்டு சென்றார்.
Comments
Post a Comment