ஆனந்த விகடன்-சில பழைய நினைகள்


நான் ஆனந்த விகடன் படிக்க தொடங்கும் போது ரொம்ப சின்ன வயது. எழுத்து கூட்டி படிப்பேன். பலமுறை என் தந்தையிடம் படிக்க சொல்லி கேட்பேன். அப்போதெல்லாம் வாண்டு மாமா என்பவர் சிறுவர்களுக்கு கதை எழுதுவார். அப்போது வெள்ளிகிழமைகளில் தான் திருவநந்தபுரத்துக்கு  விகடன் வரும். கல்கி, விகடன் இரண்டும் எங்கள் வீட்டில் வாங்குவோம். யார் முதலில் படிப்போம் என்று எனக்கும் என் அண்ணனுக்கும் பெரிய போட்டியே நடக்கும். ஆனால் வீட்டு பெரியவர்கள், என் தந்தையார், அக்கா, பெரிய அண்ணன் இவர்கள் விகடனை பிடுங்கி கொண்டு போவார்கள். நாங்கள் (நானும் என் சின்னஅண்ணனும்) அவர்கள் இருக்கையின் பின்னால் நின்று கொண்டு அதை பார்ப்போம், படிப்போம்.

 என் அண்ணன் அதற்கும் திட்டுவான். பின்னால் நின்றுகொண்டு முசு, முசு என்று மூச்சு விடாதேங்கடா ஓடுங்க, போய் படிங்க  என்று விரட்டுவான்.

எல்லோரும் படித்த பின் விகடன் எங்கள் கைக்கு வரும். அதில் சித்திர கதைகள் இருக்கும். படிக்க ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும். இப்பொதும் 'கூண்டு கிளி, டாக்டர் கீதா என்ற கதைகள் நினைவில் இருக்கின்றன.

நான் வயதுக்கு மீறிய பெரிய கதைகளை படிப்பேன். அப்போது 'தேவன்' என்பவர் விகடனில் ஆசிரியராக இருந்தார். அவர் கதைகள் ரொம்ப நன்றாக இருக்கும். 'லக்ஷ்மி கடாட்ஷம்', சி.ஐ.டி சந்துரு,டாக்டர் கீதா, துப்பரியும் சாம்பு  என்று நிறைய கதைகள் எழுதினார். அவர் பெயர் மஹாதேவன் என்று நினைக்கிறேன்.

அது போல் 'லக்ஷ்மி' என்ற புனை பெயரில் ஒரு பெண் டாக்டர் கதை எழுதுவார். அவர் பெயர் திரிபுரசுந்தரி என நினைக்கிறேன். அவர் மெடிக்கல் படித்துக்கொண்டே கதைகள் எழுதினார். அதைப்பற்றி அவர் எழுதியது பின்னர் படிக்க நேர்ந்தது. அவர் மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் படிக்கும் போது அங்கிருந்து விகடன் ஆஃபீஸுக்கு போய் திரு. வாசன் அவர்களை சந்தித்ததும், இந்த கதை எழுதுவது தனக்கு படிக்க பொருளாதர உதவியாக இருக்கும் என்று அதற்கு வாசன் ஒத்துக்கொண்டு கதைகள் எழுத ,பிரசுரிக்க உதவினார் என்றும் எழுதியிருந்தார்.பின்னர் அவர் தென் ஆஃப்ரிக்காவில் வசிக்க போய் விட்டார்.அவர் கதைகளும் மிகவும் சோகமாகவும் அழுத்தமாகவும் இருக்கும். அவர் கதைகள் 'பண்ணையார் மகள், சூரிய காந்தம் போன்றவை இப்போதும் நினைவில் இருக்கிறது.

 இதற்கு பின் மணியன், தாமறை மணாளன், செந்தூர் பாண்டி, ஸ்டெல்லா ப்ரூஸ் என்று பலர் நன்றாக எழுவார்கள். மணியன் நிறைய 'திருகுறள்' கதைகள் எழுதினார். அவர் எழுதிய 'இலவு காத்த கிளி' என்ற கதை பின்னால் 'சொல்லத்தான் நினைக்கிறேன்' என்ற படமாக K.பாலசந்தர் எடுத்தார்.

 பின்னர் எழுதிய ராமகிருஷ்ணன் அவர் சென்ற ஒவ்வொரு இடங்களைபற்றி நன்றாக எழுதுவார். சுஜாதா எழுதிய 'கனவு தொழிற்சாலை' மிக நன்றாக இருந்தது. இப்படி விகடனுடன் எனக்கு பல பல வருட தொடர்பு இருந்தது. இருக்கிறது. விகடன் social causes களுக்காக தைரியமாக சண்டை போடும் பத்திரிகை. MGR ஆட்சியில் அவர்கள் தலையங்கம் பிடிக்காமல் அதன் ஆசிரியராக இருந்த பாலசுப்ரமணியனை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். பின்னர் பயங்கர எதிர்ப்பு கிளம்பியதால் உடனடியாக அவரை விட்டு விட்டனர். MGR பின்னர் வருத்தம் தெரிவித்ததாக நினைவு. இதில் வேடிக்கை என்னவென்றால் விகடன் பத்திரிகையின் முதலாளியான S.S.வாசன் தயாரித்த 'ஒளி விளக்கு' என்ற படத்தில் MGR நடித்திருந்தார். திரு பாலசுப்ரமணியத்தின் தந்தை தான் S.S.வாசன். 

அந்த காலத்தில் மிக பிரமாண்டமான பல படங்களை திரு. வாசன் தயாரித்திருந்தார். அவ்வையார், இரும்பு திறை, வஞ்சிகோட்டை வாலிபன் , சந்திர லேகா இவை அவர் தயாரிப்பு தான். ஹிந்தியிலும் அவர் கொடி கட்டி பறந்தார்.
 
இன்னொரு முக்கியமான சங்கதி என்னவென்றால் ஆனந்த விகடனில் வந்த சித்திரங்கள். அதில் கோபுலு, சிம்ஹா, மாயா என்று பல அருமையான சித்திரக்காரர்கள் இருந்தனர். கோபுலு அற்புதமான படங்கள் வரைவார். மாயாவின் படங்கள் கொஞ்சம் அழுத்தமாக இருக்கும்.

சேவற்கொடியோன், ஸ்டெல்லா புரூஸ் போன்றபவர்களும்  நன்றாக எழுதுவார்கள். சுஜாதாவின் 'கனவு தொழிற்சாலை' விகடனில் தான் வந்தது. ராமகிருஷ்ணன் அற்புதமாக பயண கட்டுரைகள் எழுதுவார்.

சொல்லப்போனால் ஜெயகாந்தன் கதைகள் எழுதியது ஆனந்த விகடனில் தான் அதிகம். சிறு கதைகளும், நெடும் கதைகளும் எழுதினார். ஆனந்த விகடன் பல எழுத்தாளர்களை ஊக்குவித்து எழுத வைத்தது. ஒரு காலத்தில் ரூபாய்  நூறு கொடுத்து 'முத்திரை' கதைகள் எழுத வைத்தார் வாசன். அந்த காலத்தில் நூறு ரூபாய் பெரிய விஷயம்.

இபோது திரு.பலசுப்ரமணியனின் மகன் ஸ்ரீனிவாசன் தான் ஆசிரியராக இருக்கிறார் என நினைக்கிறேன்.

 அப்படியாக சின்ன குழந்தையில் இருந்து இத்தனை வருடங்ள் என்னுடன் விகடன் வந்து விட்டது. 

 வாழ்க வளமுடன்.


Comments

  1. dear sir, i too used to read vikatan and used to look forward to doctor geetha and vaathiaar vedapuri. do you by any chance know where we can get copies of it. i am willing to buy or pay to xerox a copy. i tried vikatan and they told me it was too old and they do not have back copies. thank you. rajamani (phantom363@gmail.com)

    ReplyDelete
  2. Dear Sir (Phantom363) good morning and have a great Tuesday. Thanks for reading my blog. Yes I have read Doctor Geetha (ஒரு தொடட் சித்திர கதை. தேவன் எழுதியது) a nice one and வாத்தியார் வேதபுரி ( வாண்டு மாமா) எழுதியது. It is not so good but OK. I have read them and still remember them. The first was written based in pre Independence period and the latter about a very mischievous boy troubling others and then becoming a teacher and facing same type of boys. I do not have them with me and sorry to say so. தேவன் எழுதிய பல கதைகள் மிக அற்புதமானவை. Thanks again for reading and then contacting me. Have a great day

    ReplyDelete

Post a Comment