தமிழ் டிவி சானல்களும் அவற்றின் நிகழ்ச்சிகளும்.




தமிழ் டிவி சானல்கள்

ஒருகாலத்தில் எங்கேயொ எப்போதோ வரும் டிவி போல் அல்லாமல் இப்போது இருபத்தினாலு மணி நேரமும் எதையவது ஒளிபரப்பி பணம் பண்ணுவதே டிவிக்காரர்களுக்கு தொழிலாக போயிற்று. இதையும் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் பார்க்கும் மக்கள் இருப்பதால் பல பல டிவி சானல்கள் வந்துவிட்டனன். எல்லா அரசியல்வாதிகளும் டிவி சானல்கள் வைத்துள்ளனர்.கருப்பு பணத்தைக் கூட வெள்ளையாக்க முடியும் இதில். யார் கணக்கு வைத்துக்கொண்டிருக்கிறார்கை?

இப்போது அந்த டிவி சானல்களை கொஞ்சம் பார்ப்போமா?

மழை காலம் தொடங்கிவிட்டது. செய்திகள் இல்லாத டிவி காரனுகள் போர வர்ர ‘புத்திசாலிகளை, “மளை (கவனிக்கவும். மழை அல்ல மளை) பெய்யுதே இதப்பற்றி என்ன நினைக்கிறீங்க? என்று கேட்ப்பார்கள். எல்லா சானலிலும் நடக்கும் கதை தான் இது. முப்பது நிமிஷம் எந்த எழவையாவது சொல்லி ஓட்டணமே. விளம்பரம் இருபது நிமிடங்கள் போய்விடும். பாக்கி?

உடனே அந்த ‘புத்திசாலி “ மளை பெஞ்சா மேலை தண்ணி விளும், சட்டை எல்லாம் நனையும், அளுக்காகும். ரோட்டிலே தண்ணி கட்டும். ஆஃபீஸ் போக, ஸ்கூள் போக, கடை கண்ணிக்கு போக கஷ்டமாகும். மளை மேலே இருந்து கீளே விளும். கீளே இருந்து மேலே போகாது. மளையிலே நனைஞ்ஜா ஜலதோஷம் பிடிக்கும். சொல்லப்போனா எல்லாருக்கும் கஷ்டம் தான் என்று அதி புத்திசாலித்தனமாக சொல்லும். 

இந்த மழை இல்லாட்டா குடிக்க, சமைக்க , குளிக்க  தண்ணிக்கு எங்கே போவார்கள்? பயிர் எப்படி பண்ணுவார்கள் என்ற எண்ணமே இருக்காது.

இதேபோல உப்பு பெராத விஷயங்களை தேடிப்பிடித்து ஒளி பரப்புவாங்கள். ஊட்டி, கொடைகானல், ஏர்க்காடு இங்கெல்லாம் போய் அங்கு வந்த சிலரை பேட்டி காண்பார்கள். அந்த பேட்டி காணப்பட்ட நபர் டிவியில் வருவதால் உடனே அரைகுறை ஆங்கிலத்தில் ‘ஊட்டி இஸ் எ நைஸ் ப்ளேஸ். குளிராக இருக்கும். மலையில் இருப்பதால் வெரி கோல்ட். கீளே இருந்தால் ஹாட். நல்லா சுற்றிப்பார்த்தோம். எஞ்ஜாய் பண்ணினோம். வெரி நைஸ் ப்லேஸ் என்று எதையாவது உளரும். தப்பி தவறி கூட ‘ழ என்ற எழுத்தை ஒருவரும் சொல்ல மாட்டார்கள். அப்படிப்பட்ட தமிழ் தான் மக்களுக்கு தெரியும். இப்படி மைக்கை தூக்கி கொண்டு யாராவது அகப்படுகிறார்களா என் அலைவாங்க. அதுவும் ஒரு ‘சுமாரான பொண்ணு கிடைச்ச விடாம ‘கமென்ட் வாங்கிடுவானுக

இதே போல தன் குழந்தைகளை வீட்டிலிருந்து ஏதோ சொல்லி குடுத்து அழைத்து வந்து ‘பட்டிமன்றங்களில் பேச விடுவார்கள். அந்த குழந்தையும் தன் அறிவுக்கும், வயசுக்கும் மீறிய ஏதாவது பேசும். எல்லோரும் கை தட்டி மகிழ்வார்கள். எப்படி இதை இந்த குழந்தை இப்படி பேசுகிறது என்று யாரும் யோசிப்பதில்லை. யார் என்ன சொன்னாலும் கை தட்டுவார்கள். எல்லா பண்டிகைகளுக்கும் மற்ற விசெஷமான நாட்களுக்கும் இப்படி பட்டி மன்ற பேச்சுக்கள் கண்டிப்பாக உண்டு. இதிலேயே வயிற்றை கழுபவர்கள் உண்டு.

உணமையை சொல்வோம், பொய்யை சொல்வோம், உண்மையே வெல்லும், ஆலோசனை நேரம்  என்று பலரது சொந்த விஷயங்களை அவர்களே வெட்கமில்லாமல் அசிங்கமாக அழுது, கத்தி, ஆர்ப்பாடமாக விவரிக்க சில சானல்கள் 'எப்பிசோட்' நடத்துகின்றன. இங்கு நன்கு ‘மேக் அப் போட்ட ஒரு பெண் அமர்ந்துகொண்டு ஒரு ஹைகோர்ட் ஜட்ஜைவிட அதிகாரமாக வந்தவர்களை திட்டி, அடக்கி, கத்தி, கோபித்து ‘நீதி வழங்குவாள். அதை கர்ம சிரத்தையாக அங்கு வந்த ஆண்களும் பெண்களும் ஏற்றுக்கொண்டு செல்கின்றனர். சில சமயங்களில் அவர்கள் அடித்துக்கொள்வதும் உண்டு. இவர்களுக்கு யார் இந்த அதிகாரம் கொடுத்தது என்று தெரியவில்லை.

அதிகாலையில் கடவுளை பற்றி கடவுளே அறியாத பல விஷயங்களை சில பெண்களும் ஆண்களும் பணம் வாங்கிகொண்டு பேசுகிறார்கள். இதில் பலர் ஒரே விஷ்யத்தை திரும்ப திரும்ப பேசுகிறார்கள். பலரும் கடவுளை நேரில் கண்டதுபோலும் அவருடன் மிக நட்பு கொண்ட்து போலும் நம்மை நம்ப வைக்க மிகவும் சிரமப்படுகிறார்கள்.

அழகு கலை என்று மிச்சம் மீதி இருக்கும் அழகை கெடுக்க சில பெண்கள் ‘நல்ல டிப்ஸ் தருகிறார்கள். இதே போல் உடல் பருமன் குறைக்க சில புத்திமதிகள் சொல்ல சில பெண்கள் வருகிறார்கள். இவர்கள் முதலில் தங்கள் உடல் பருமை குறைத்தால் நன்றாக இருக்கும்.

வயதுக்கு மீறி பேசும் குழந்தைகளை வைத்துக்கூட சில சானல்கள் நிகழ்ச்சிகள் நட்த்துகின்றன. 

சில சானல்கள் கர்னாடக ஸ்ங்கீதம் என்று சொல்லி பல ஆண்களையும் பெண்களையும் பாட விடுவார்கள். இவர்கள் அத்தனை பேரும் பொருள் தெரியாத சமஸ்கிருதத்திலோ அல்லது தெலுங்கிலோ ‘பிரமாதமாக பாடுவார்கள். அதை எதிரில் இருந்து தலையை ஆட்டி ஆட்டி ரசிக்க சில வயதானவர்கள் இருப்பார்கள். ஒருத்தனுக்கும் ஒரு இழவும் புரியாது. மற்ற எந்த மொழிக்காரனாவது இப்படி மற்ற மொழி பாட்டுக்களை விரும்பி கேட்பானா? கேட்டால் “சங்கீதத்திற்கு மொழி கிடையாது என்பான். மற்ற மொழிக்கார்ர்கள் இதைப்போல் சொல்வார்களா?

மற்ற பாட்டுப்போட்டி என்று சொல்லி ஏராளமான ஆண்களையும் பெண்களையும் அழைத்து பாட சொல்லி அவர்களில் பலரையும் தட்டி கழித்து மிக சிலரை தேர்ந்து எடுத்து பர்சும் பட சான்சும் கொடுக்கிறார்கள். இதே போல டான்ஸ் என்று சொல்லி பல சர்க்கஸ் காட்சிகள் அறங்கேறுகின்றன. ஆண்களும் பெண்களும் கட்டி தழுவி ஒருவர் மேல் ஒருவர் ஏறி, குதித்து ஆட்டம் போடுமகின்றனர். கேட்டால் இது “மாடர்ன் டான்ஸ் மூவ்மென்ட் என்கிறார்கள்.

பல சானல்களில் கூட்டாக உட்கார்ந்துகொண்டு ஏதாவது ஒரு விஷயத்தை, முக்கால் வாசி அரசியலாக இருக்கும், எடுத்துக்கொண்டு மிக சத்தமாக கிட்டதட்ட அடிக்கிறமாதிரி சண்டை போட்டுகொள்வார்கள். இதைத்தவிர உப்பு பெறாத விஷயத்தை தலைப்பாக கொண்டு ‘நீயா நானாபார்த்து விடலாம் என ஏதாவது பேச கோட்டு போட்டுக்கொண்டு ஒரு ஆங்கர் தான் தான் உலக்கத்திலேயே புத்திசாலி போல இந்த விஷயங்கள் தனக்கு தெரிந்ததுபோல் ‘நீதி அல்லது தீர்ப்பு சொல்லி முடித்து வைப்பான். (உதாரணத்தித்திற்கு ஒன்று வேட்டி கட்டுவது நல்லதா கெட்டதா? வேட்டியை பல நூறு ஆண்டுகளாக தமிழனும், மலயாளியும் மற்ற இந்தியர்களும் கட்டி வருகின்றனர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.)

சில சானல்களில்சிலர் தங்களை  ‘டாக்டர்கள் என கூறிக்கொண்டு எல்லவிதமான  நோய்களையும் இனி வரப்போகும் நோய்களையும் தீர்த்துவைப்பதாக கூறுகிறார்கள். இதில் எத்தனை பேர் பணத்தை விட்டு விட்டு   நோய்களை வாங்குகிறார்களோ தெரியவில்லை. இவர்களில் எத்தனை பேர் டாக்டர்கள் என்றும் தெரியவில்லை.

பல ந்யூஸ் (செய்தி) சானல்களில் உண்மையான செய்திகளுடன் தங்கள் சொந்த செய்திகளையும் சேர்த்து அரைமணி நேர செய்தியில் இருபத்து ஐந்து நிமிடம் விளம்பரத்தையும் ஒளிபரப்பி ‘செய்திகள் தருகிறார்கள்.

பல சானல்களில் பல போட்டிகள் வைத்து ஏராளமான (உண்மையா?) பரிசுகள், பணம் தருகிறார்கள் இதற்காக ஆண்களும் பெண்களும் என்ன வேணுமானாலும் செய்கிறார்கள் மனைவியை அல்லது கணவனை தூக்கிகொண்டு ஓடுகிறார்கள்,கட்டிப்பிடிக்கிறார்கள், முத்தமிடுகிறார்கள், ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டும் அடித்துக்கொண்டும் விளையாடுகிறார்கள், கணவன் சமைக்க மனைவி அமர்ந்துகொண்டு வேடிக்கை பார்க்கிறாள். இப்படி பல பல.

இப்படி பல வேடிக்கையான பல விஷ்யகளையும் கேவலம் கெட்ட ‘சீரியல்களையும் வைத்து தமிழ் சானல்கள பிழைப்பு நட்த்துகின்றன. இந்த சானல்களுக்கு இடையில் நல்ல தமிழ் பேசி, பெரும்பாலும் நல்ல விஷயங்களை ஒளிபரப்பும் பொதிகை சானலை யாரும் பார்ப்பார்களா என்று தெரியவில்லை. அங்கு தான் நிறைய விஞ்ஞான விஷயங்களை ஒளிபரப்புகிறார்கள், பேசுகிறார்கள்.

எனக்கு என்ன புரியவில்லை என்றால் எப்படி இந்த முப்பது நாற்பது சானல்களை மக்கள் பார்க்கிறார்கள்? எல்லா சானல்களும் எப்படி நடத்த முடிகிறது. அவர்கள் வருமானம் எப்படி வருகிரது? எப்படி இத்தனை டிவிக்களும் விளம்பரங்களை ஏற்பாடு செய்கிறார்கள் என்று வியப்பாக இருக்கிறது.
.

Comments