ஹிந்துக்களும் ஹிந்து மதமும்



இங்கு பலருக்கும் ஹிந்து என்றால் என்ன பொருள் என்றும் பல ஹிந்துக்களுக்கு தாங்கள் ஹிந்துக்கள் என்றும் தெரிவதில்லை. அவர்களுக்கு தங்கள் தங்கள் ஜாதியும் கும்பிடும் லோக்கல் (local) தெய்வங்களும் தான் தெரியும். இதனால் தான் பலருக்கும் ஹிந்துமதத்தின் தத்துவங்கள், அறிவுகள், வேதங்கள், கீதை இவற்றை பற்றி தெரியாது. இதனால் தான் அவர்கள் மற்ற மதங்களை நாடிபோய் அந்த முஸ்லீம் பள்ளிகள், தர்க்காக்கள், சர்ச்சுகளுக்கு போய் வணங்குகிறர்கள், தாயத்து கட்டுகிறார்கள், நோன்பு இருக்கிறார்கள். மற்ற எந்த மதத்தானும் இதை செய்கிறானா? இல்லை.

‘இந்தஸ் என்ற ஆற்றின் கரையில் வசித்தவரை ஹிந்துக்கள் என்று பிற நாட்டவர் சொல்ல அதுவே ஒரு மதமாக மாறிவிட்ட்து. இங்கு வசித்தவர்களை பின்பற்றி அவர்களின் வழி தென்றல்களும் அதே பழக்க வழக்கங்களை, கோட்பாடுகளை, சம்பிரதாயங்களை பின்பற்றியதால் அதுவே ஒரு மதமாக மாறியது. ஹிந்து மதத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. அந்த ஹிந்து மதத்தை யாரும் ஸ்தாபிக்க வில்லை, உருவாக்க வில்லை. தானே வளர்ந்து நிலைத்து நின்றது. ஆனால் மற்ற பெரிய மதங்களை யாராவது தொடங்கி இருப்பார்கள். சட்ட திட்டங்கள் வகுத்திருப்பார்கள்.

ஹிந்து கோவிகளில் இருக்கும் பூஜாரிகள் யாரும் சரியான படிப்பில்லாதவர்கள். அவர்களுக்கு ஹிந்து மத்த்தின் எந்த கோட்பாடும் தெரியாது. சில மந்திரங்கள் சொல்லி வருகின்றவர்களிடம் காசு வாங்கி பிழைப்பை நடத்துகிறார்கள். அவர்கள் பலரும் தங்களை சார்ந்த கோவிலின் பெருமை பேசுவார்களே தவிர, கீதை, ராமாயனம், மஹா பாரதம் இவற்றை பற்றியோ, வேதங்களை, இதிகாசங்களை, உபனிஷத்துக்களை பற்றி எதுவும் தெரியாது. இது தான் ஹிந்து மதத்தின் மிகப்பெரிய குறைபாடு. இதனால் மக்களுக்கு தங்கள் சொந்த மத்த்தின் அருமை பெருமைகள் தெரியாது. தவிர ஹிந்து மதத்தில் இறைவணை வணங்க எந்தகட்டுப்பாடும் இல்லை. மக்கள் தனகு தோன்றியது போல், தோன்றிய நேரத்தில், தோன்றிய படி வணங்கி கொள்ளலாம். ஹிந்து மத கோட்பாடின் படி கடவுள் எங்கும் இருக்கிறார், உன் உள்ளிலும் இருக்கிறார் என்கிறது. கீதையில் கிருஷ்ணன் இதையே கூறுகிறார்.

“யத்கரோஷி யதச்னாசி யஜ்ஜு கோஷி, ததாசியத் : யத் தபஸ்ஸி கௌந்தேயா தத் குருஷ்வ மதர்ப்பணம். கீதை.

அர்ஜுனனிடம் கிருஷ்ணன் அர்ஜுனா (கௌந்தேயா: குந்தி மகன்) என்னிடம் நீ எதை உண்டாலும், செய்தாலும்,எந்த ஹோமம் செய்தாலும்,எதை தர்மம் செய்தாலும், எந்த தவத்தை செய்தாலும் எனக்கு தந்து விடு உனக்கு எல்லா நன்மைகளையும் நான் செய்கிறேன்." என்கிறார்.

கடவுள் எங்கும், எதிலும், எப்போதும் இருப்பதால் நீ நல்லவனாக இரு, நல்லது செய், நான் உன்னை எலாவித பாவங்களிலிருந்தும் காப்பாற்றுவேன் என்று கூறுகிறார் கிருஷ்ணன்.

ஆனால் மற்ற மதங்கள் அப்படி அல்ல. அவர்களுக்கு என்று சில சம்பிராதயங்கள், விதிகள், கோட்பாடுகள் உள்ளன. அவற்றை அவர்கள் கடுமையாக பின் பற்றவேண்டும். அவர்கள் தங்கள் மதங்களை பிரசாரம் செய்கிறார்கள். பல விதங்களில் மக்களை தங்கள் வசம் கொண்டு வர மிகவும் பிரயத்தனம் செய்கிறார்கள்.

இந்த மத பிரசாரங்களால் பலரும் கவரப்பட்டு அங்கு போய் சேர்கிறார்கள்.இதனால் அவர்கள் மற்ற மிக கடுமையான கோட்பாடுகளையும், கட்டுப்பாடுகள் உள்ள மதங்களை நாடிபோய் மதம் மாறுகிறார்கள். ஹிந்து மதத்தின் உயர்ந்த தத்துவங்களை இவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை, யாரும் சொல்லி தருவதும் இல்லை. இதை தவிர பல தெய்வங்கள், அதன் வழிபாடுகள், சில போலி சாமியார்கள், அவர்கள் சொல்லும் பரிகாரங்கள் என்று ஹிந்துக்கள் வழி மாறி போய்விடுகின்றனர். பல பல கடவுள்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். இன்னும் உருவாக்கப்படுகின்றனர். பல ஏமாற்று பேர்வழிகள் ‘தாங்களே தெய்வம் என்று கூறிக்கொண்டு பணம் பறிக்கின்றனர்.

வேறெங்கும் இல்லாத வித இதமான ஜாதிகள் இங்கு பல்கி பெருகி வளர்ந்து கொண்டாடப்படுகின்றன. அரசும் தன் பங்குக்கு ஜாதிகள அள்ளி அணைத்து வளர்க்கின்றன, ஓட்டு வாங்க. ஆகையால் ஜாதிகள் படிக்க, ஓட்டு வாங்க, வேலை வாங்க என்று பல காரணங்களுக்காக பேணப்படுகின்றன. ஜாதிகள் பணக்காரனுக்கு கிடையாது. மற்றவர்கள் தான் அதை வைத்து கொன்றும், தின்றும் வாழ்க்கை நடத்துகின்றனர்.

பல படித்த மனிதர்கள் கூட ஜாதி என்று வரும்போது தன் ஜாதி என்று அதன் பக்கம் போகின்றனர். ஜாதி என்பது ஒருவன் செய்யும் தொழிலிருந்து வந்தது என்பது தெரிந்திருந்தும் அதனை விட யாரும் தயாராக இல்லை.

பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் “ நான் ஒருவன் செய்யும் தொழிலையும் அவனின் குணத்தையும் வைத்து நான்கு வர்ணங்களை உருவாக்கினேன் என்கிறார். அவரே “பிறப்பினால் ஒருவன் எந்த வர்ணத்தையும் சேரமுடியாது என்கிறார்.

சில ஜாதிக்காரர்கள் மதத்தை தங்கள் கட்டுப்ப்பாட்டில் வைத்தது கூட ஒரு காரணம் ஆகும். ஹிந்து மதம் அழிவது இந்த வேறுபட்ட பல ஜாதிகளினால் தான்.

Comments