எ.கெ.செட்டியாரின் அமெரிக்க பயணத்தில் ஒரு நிகழ்சி.

முன்பு ஒருமுறை ஏதொ பத்திரிகையில் படித்தது.

A.K.(அ.கரு) செட்டியார் என்றொருவர் இருந்தார் முன்னாளில். இவர் பல நாடுகளுக்கு சென்று வந்ததால் உலகம் சுற்றும் தமிழர் என்று அழைக்கப்பட்டார்.குமரி மலர் என்ற பத்திரிகையை பல காலம் நடத்தி வந்தார்.புகைபட தொழிலில் பாண்டித்யம் பெற்றவர். மஹாத்மா காந்தி மேல் மிகுந்த பக்தியும், அன்பும் கொண்டவர். பல செய்தி படங்களை தயாரித்து வெளியிட்டவர்.

ஒருமுறை இவர் அமெரிக்காவில் இருந்தபோது அவர் கையில் அவ்வளவாக பணம் இல்லையாம். பசித்ததால் ஹோட்டலுக்கு போன அவர் அங்கிருந்த மெனு கார்டில் இருந்த மிக குறைந்த விலையுள்ள பொரியல் போன்ற பொருளை ஆர்டர் செய்்து சாப்பிட்டாராம்.

ஆனால் அது அவர் நினைத்ததை விட அளவு குறைவாக இருந்ததாம். சரி என்ன செய்வது என்று எண்ணியவாறு எழப் போனபோது அவருக்கு உணவளித்த கருப்பர் இன்னொரு பிளேட் பொரியலை அவருக்கு கொண்டு வைத்தார். செட்டியார் இதை நான் ஆர்டர் செய்யவில்லையே என்ற பார்வையுடன் அந்த கருப்பரை நோக்கினார்.

அதற்கு அந்த கருப்பினர் "கொஞ்சம் மீந்திருந்தது" என்று புன்னகைத்துக்கொண்டே சொன்னாராம். தன்னைப்போல் ஒரு கருப்பன் காசு இல்லாமல் கஷ்டப் படுவதை காணாமல் அதை கொடுத்தார் என் செட்டியார் எழுதி இருந்தார்.

கடைசியில் பில் வந்தபோது அந்த கருப்பர் அந்த பொரியலுக்கு பணம் வாங்கவில்லை என தெரிந்தது.

செட்டியார் "என் கருப்பு நிறத்தை கண்டு நம்மைபோல் ஒரு கருப்பன் பணம் இல்லாமல் சாப்பிட கஷ்டப்படுகிறான் என்று நினைத்து அந்த கருப்பர் அந்த இரெண்டாவது பிளைட் பொரியலை இனாமக் கொடுத்தார். இது என் நிறத்தால் எனக்கு கிடைத்த பயன்" என்று அவர் தன் புத்தகத்தில் எழுதி உள்ளார்.

Comments