கண்டதும், கேட்டதும், படித்ததும்



கண்டதும், கேட்டதும், படித்ததும்

A.P நாகராஜன் ஒரு முறை ஒரு கல்யாணத்திற்கு போயிருந்தார். சாப்பிட சொன்னதால் சாப்பாட்டு அறைக்கு போனார். அங்கிருந்தவர் அவரிடம் “வெஜிடேரியனா, நான் வெஜிட்டேரியனா என்று கேட்டார்.

நாகராஜன் ‘நான் வெஜிட்டேரியன்  என்றார்.

அவரை நான் வெஜிடேரியன் அறைக்கு கொண்டு போய் அமரச் சொன்னார்கள். அந்த சாப்பாட்டை கண்டு பயந்து போன அவர் “நான் இதை எல்லாம் சாப்பிட மாட்டேன் என்றார்.

நீங்கள் தானே “நான்வெஜிட்டேரியன் என்றீர்கள் என்று கேட்டனர்.
அவர் அதற்கு “ நான் (I)   வெஜிட்டேரியன் என்று சொன்னேன் “ என்றார்.


அனந்த சயனம் அய்யெங்கார் ‘லோக் சபா ஸ்பீக்கர் ஆக இருந்தபோது இ.வி.கெ. சம்பத் அவரை காணச் சென்றார்.

அப்போது அய்யெங்கார் அவரிடம் “சிறைக்கு போனீர்களே சௌகரியமாக இருந்ததா? என்று கேட்டார். ( ஹிந்தி எதிர்ப்பு சமயம் அது. சம்பத்தை கைது செய்து சிறையில் வைத்திருந்தது மாநில அரசு)

“கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது என்றார் சம்பத்.

“ரொம்ப நல்லது ரொம்ப நல்லது “ என்றார் அய்யெங்கார்.

பின்னர் கொஞ்சம்  நேரம் கழிந்து சம்பத் அவரிடம் “உங்கள் நீரிவு நோய் எப்படி இருக்கிறது என்று கேட்டார்.

அய்யெங்கார் அதற்கு “கஷ்டமாகத்தான் இருக்கிறது என்றார்.

சம்பத் அதற்கு “ரொம்ப சந்தோஷம், ரொம்ப சந்தோஷம் என்றார்.  


மா.பொ.சிவஞானம் கட்சி நடத்திய சமயம் கிருபானந்த வாரியரை சொற்பொழிவு நடத்த அழைத்திருந்தார்.

வாரியார் பேசிக்கொண்டிருந்த சமயம் ஒருவர் ஒரு தம்ளரில் எதையோ கொண்டு வந்து வாரியார் முன் வைத்தார்.

வாரியார் “நான் சொன்னது மெய், இது காப்பி என்றார்.

தம்ளரை எட்டிப்பார்த்த ம.பொ.சி ‘இது காப்பி இல்லை பால் என்றார்.

வாரியார் அதற்கு ‘நான் முப்பாலையும் கடந்து அப்பால் வந்து விட்டேன் இப்பாலும் வந்தது “ என்றார்.


ஒரு பெண்ணை திருமணம் செய்யப்போன மாப்பிள்ளை பெண்ணின் தாயோடு ஓடிப்போன கதை. சென்னையில் ஒருவர் தன் பெண்ணிற்காக மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருந்த வேளையில் அவர்கள் இருப்பிட்த்தின் அருகிலே வசித்த ஒரு ஆண கிடைத்தார். அவரை திருமணம் செய்து கொடுக்கலாம் என்று நினைத்து எல்லா ஏற்பாடுகளையும் செய்யும்போது அடிக்கடி அவர்கள் வீட்டிற்கு வந்த அந்த மாப்பிள்ளை பையன் மணப்பெண்ணின் தாயுடன் ஓடிப்போனான். மணப்பெண் போலீசில் ‘கம்ப்ளைன்ட்செய்ய அவர்கள் தனியாக வாழ்ந்து கொண்டிருந்த அந்த ‘தம்பதியை கண்டு பிடித்தனர். அவர்களை திருப்பி கொண்டு வந்தபோது அந்த மணமகன் இனி அந்த வயதான பெண் எனக்கு வேண்டாம் என்று அவளை மறுத்து விட்டான். நல்ல வேளையாக அந்த பெண்ணின் கணவன் அவளை ஏற்றுக்கொண்டார்.

ஒரு மிருக காட்சி சாலையில் 30 வருடங்களாக காவலாக இருந்த ஒருவர் கான்சரால் பாதிக்கப்பட்டு மரணம் அடையும் தருவாயில் தான் வளர்த்து பாதுகாத்துவந்த ஒட்டக சிவிங்கிகளை பார்க்க சக்கர நாற்காலியில் வந்தாராம். அவரைப்பார்த்த அந்த ஒட்டகசிவிங்கி ஓடிவந்து அவர் தலையை தன் தலயால் முட்டி முத்தமிட்டு அணைத்து கொஞ்சியதாம். அவரின் மரணம் அதற்கு முன்னமே தெரிந்திருக்கும் போலும்.

புருல்லிய என்ற் வங்காள கிராமத்தில் ஒரு யானை அட்டகாசம் செய்து வந்ததாம். பல வீடுகளையும், வயல்களையும், தோட்டங்களையும் அடித்து தும்சம் பண்ணியது. பலரையும் கொன்று விட்ட்து. அந்த யானை ஒரு நாள் நடு இரவில் ஒரு விவசாயின் வீட்டை அடித்து, இடித்து சுவற்றை உடைத்து தள்ளியது. பக்கத்து அறையில் படுத்திருந்த விவசாயியும் அவர் மனைவியும் ஒன்றும் அரியாது திகைத்து நிற்க அந்த அறையில் தூங்கி கொண்டிருந்த அவர்கள் குழந்தை வீரிட்டு அழ ஆரம்பித்த்து. சில தடிகள், குப்பை கூளங்கள் அதன் மேல் விழுந்திருந்ததாம். எல்லவற்றையும் இடித்து தள்ளிவிட்டு திரும்பி போய்க்கொண்டிருந்த யானை குழந்தையின் அழுகுரல் கேட்டு திரும்பி வந்தது. குழந்தை மேல் விழுந்திருந்த எல்லா தடி, குப்பைகளை எடுத்து ஓரமாக வைத்தது. பின்னர் அந்த குழந்தையை எடுத்து தள்ளி வைத்துவிட்டு திரும்பி போனதாம். விவசாயி, தான் பிள்ளையார் பக்தன் ஆனதால் தான் யானை தன் குழந்தையை காப்பாற்றியது என புளகாங்கிதம் அடைந்தார்.

சென்னையின் பாலியல் தோழிலாளிகள் தங்களுக்காக ஒரு சிவப்பு விளக்கு பகுதியை சென்னையில் கேட்கிறார்கள். கெ.கலாவதி, Secretary Indira Peer Educators Collective,  ஒரு 2300 பெண் பாலியல் தொழிலாளிகளின் கூட்டத்தில் சொன்னது –நாங்கள் எல்லோரும்  போலீஸ்காரர்களாலும், எங்களுடைய வாடிக்கையாளர்களாலும் துன்புறுத்தப்படுகிறோம் அகையால் எங்களுக்கு என்று ஒரு பாதுகாப்பான இடம் சென்னையில் தேவை. சென்னையில் மட்டும் தான் ஒரு சிவப்பு விளக்கு பகுதி என்பது இல்லை. சென்ற நவம்பர் மாதம் இவர்கள் எல்லோரும் சேர்ந்து முதல் அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதி தங்களின் வேலை செய்யும் இடத்தின் தேவையை குடிப்பிட்டு கேட்டிருந்தார்கள். சென்னையின் 60% பாலியல் தொழிலாளர்கள் தங்கள் தங்கள் இடங்களிலும் வேறு லாட்ஜுகளிலும் யாரும் அறியாதவாறு ‘தொழில் நடத்துகிறார்கள்.

மத்திய பிரேதேஷ் கட்னி மாவட்டத்தில் ராஜூ விஸ்வகர்மா என்ற 38 வயது மனிதன் தீ புண்களால் கஷ்டப்பட்டு மருத்துவமனையில் இறந்தான்.  அவன் அவனுடைய கிராமத்தை சேர்ந்த ஒரு 25 வயது பெண்ணை கற்பழித்து விட்டான். அந்த பெண்ணும் அதை போலீஸிடம் (கம்பலைன்ட்) புகார் செய்துள்ளாள். அவன் ஜாமீனில் வெளிவந்து நடமாடிக்கொண்டிருந்தான். அந்த கற்பழிக்கபட்ட பெண்ணும் அவள் குடும்பமும் அவனை ஒரு ஒப்பந்தத்திற்காக அவர்கள் வீட்டிற்கு அழைத்திருந்தார்கள். அங்கு அவன் போன உடன் அந்த கற்பழிக்கப்பட்ட பெண் அவனை அமுக்கி பிடித்து அவன் மேல் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து விட்டாள் என்று மரண வாக்குமூலம் கொடுத்து விட்டு இறந்து போனான்.

ஜேசன் பட்கெட் என்ற சாதாரண ஃபர்னிச்சர் விற்பனையாளன் இரன்டு ரவிடிகளால் ஒரு பாரை விட்டு வெளியில் வந்தபோது பாரின் வெளியில் தலையில் அடிக்கப்பட்டு சீரியசாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டான். அந்த விபத்தின் சிகித்சையில் இருந்து மீண்டு வந்த அவனுக்கு  எல்லாமே ஜாமிட்ரிக்கல் வடிவங்களாக தெரிந்தது. அதனை அவன் படங்களக வரைந்தான்.ஒரு நாள் ஒரு ‘பிசியிஸ்ட் அந்த வடிவங்களை பார்த்து அதிசயித்துபோனார். அவையெல்லாம் கணித வடிவங்கள் மிகுந்த பயனுள்ளவையும் அதுவரை யாரும் கண்டுபிடிக்கததாயும் இருந்தது. அவர் அவனை கல்லூரியில் சேர்த்து படிக்கவைத்தார். 

இது பீட்டர் ஹெர்கஸ் என்ற ஹாலந்து நாட்டுக்காரர் இரண்டாம் உலகப்போர் நடக்கும் போது நான்காவது மாடியில் பெயின்ட் அடிக்கும் போது கீழே விழுந்து அடிபட்டதில்  (சைக்கிக் பவர்) அதன் பின் அவர் யாரைத்தொட்டாலும் அல்லது அவர்கள் உபயோகித்த பொருட்களை தொட்டாலும் அவர்களின் நடந்த, நடக்கப்போகும் நிகழ்ச்சிகளை சொல்லும் ஆற்றல் பெற்றார்.. நாம் நமது மூளையின் ஆற்றலின் 5% க்கு குறைவாகவே உபயோகிக்கிறோம். இதுவும் மிக சிறந்த அறிவாளிகள், விஞ்ஞானிகள், அறிஞகர்களின் மூளையின் உபயோகம்.

 ஒருவன் தன் தாயார் ஒரு பரோட்டா கேட்டு கடைக்காரன் கொடுக்காததால் இருவரும் கட்டிப்பிரண்டு சண்டை போட்டு பின் அந்த மனிதனின் மரணத்தில் சண்டை முடிந்தது. அவன் தாயார் அந்த கடையில் முன்னாளில் வேலை செய்து வந்தாளாம். ஒரு நாள் ஒரு பரோட்டவை இனாமாக அவள் கேட்க கடைக்காரன் கொடுக்காமல் அவளை திட்டியதாகவும் அந்தப்பெண் வீட்டிற்கு சென்று தன் மகனிடம் அதை சொல்ல, அவமானம் தாங்காத மகன் அந்த கடைக்காரனிடம் சண்டை பிடிக்க கடைசியில் அது அவனுடைய மரணத்தில் முடிந்தது. இதே கடைக்காரன் முன்பு ஒரு வக்கீலையும் இது போல் தாக்கி உள்ளான்.

40 வயதான ஒரு டீச்சர் தன் 17 வயது மாணவனிடம் மையல் கொண்டு அவனுடன் உறவு கொண்டிருந்தாள். ஏர்ஃபோர்சில் வேலை செய்யும் கணவன் எப்போதும் குடித்துக்கொண்டு இருப்பதாலும் தன்னிடம் உறவு கொள்ளாததாலும் தான் மாணவன் அவளிடம் காதல் வசப்பட்டு நெருங்கவும் அவளும் சம்மதித்து உறவாடி வந்தாள். இதை கணவன் கண்டிக்க அவள் தன் காதலனுடன் சேர்ந்து அவனை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அவன் தண்ணி அடித்து இறந்து விட்டதாக நாடகமாடினாள். ஆஸ்பத்திரியில் பிரேத பர்சோதனையில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிந்து விட்டது. இப்போது காதலனுடன் கம்பி எண்ணும் டீச்சர் தன் 3 வயது மகளையும் சேர்த்து கம்பி எண்ண வேண்டி உள்ளது. பார்த்துக்கொள்ள யாரும் இல்லையாம். பாவம் குழந்தை.

பங்களூரில் ஒரு செய்தி. ஒரு ரிடையர்டு சப் இன்ஸ்பெக்டர் அவர் வீட்டிலேயே  நாய் சங்கிலியால் கட்டப்பட்டு 17 நாட்கள் இருந்தாராம். மனைவியும், இரெண்டு மகன்களும் சேர்ந்து இந்த கொடுமையை செய்திருக்கிறார்கள். அவருக்கு 20 லக்ஷம் ரூபாய் வந்ததாம். இந்த பணத்தை மனைவியும் பிள்ளைகளும் கேட்டிருக்கிறார்கள். அவர் கொடுக்க மறுத்ததால் தான் இந்த தண்டனை. அவரின் பல வீடுகளின் வாடகையை மனைவி எடுத்துக்கொண்டிருக்கிறாள். பிள்ளைகள் இருவரும் இஞ்சினியர்கள். ஒருவன் இன்ஃபோஸிஸ் லும் மற்றவன் HP இலும் வேலை செய்கிறார்களாம். அவருக்கு சாப்பாட்டை மனைவி ஊட்டி விட்டிருக்கிறாள். பெட் பான் கொடுத்து அதிலேயே அவர் 'பாத் ரூம்' விஷயங்களை செய்ய சொல்லி இருக்கிறார்கள். அவர் தம்பி அவரை காண வந்தபோது அவர் இல்லாததால் பக்கத்தில் கேட்க அவர்கள் அவர் கத்துவது கேட்பதாக சொல்ல, தம்பி போலீஸில் சொல்லி அவரை விடுவித்திருக்கிறார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டர்  வந்து பார்த்தபோது அந்த ரூமில் அவ்வளவு துர் நாற்றம் வீசியதாம். "எப்படி அந்த மனிதர் இப்படி நாற்றத்தில் வாழ்ந்தார் என்று தெரியவில்லை" என்று சொன்னாராம்.

சென்னையில் சிலர் ஒரு நாய் ஒரு புதைக்கபட்ட இடத்தில் உட்கார்ந்து இருப்பதை பார்த்தார்கள். அதற்கு உனவு கொடுத்துப்பார்த்தால் அது உண்ணவில்லை. அங்கேயே இருந்தது. சிலர் அதை கூட்டிகொண்டுபோய் பார்த்தால் அது திரும்பவும் அங்கேயே வந்து விட்டது. பின்னர் தான் அங்கு புதையுண்டிருப்பது ஒரு பள்ளியில் படிக்ககும் பையன் என்றும் அவனை ஒரு கார் அடித்து போட்டுவிட்டு போய் விட்டதாகவும் அவனை சித்தாள் வேலை செய்யும் அவன் தாயார் அங்கேயே புதைத்து விட்டதாகவும் தெரிந்தது. சிலர் அந்த சித்தாளை தேடிப்போய் சொன்னவுடன் அந்த தாய் அந்த நாய் அவன் வளர்த்ததாகவும் அவன் இறந்த நாளில் இருந்து காணவில்லை எனவும் கூறி விட்டு அந்த இடத்திற்கு வந்து அந்த நாயை கூட்டிக்கொண்டு போனாள். சில நாட்களில் அந்த தாய் அந்த நாயுடன் தன் சொந்த ஊருக்கு போய் விட்டதாக சொன்னார்கள்.

ரயில் இருந்து சிலர் நடந்து வரும் போது ஒரு நாய் பயங்கரமாக குலைத்ததாம். அவர்கள் அதை விரட்டி விட்டு நடக்க முற்பட்டபோது அந்த நாய் அங்கு இருந்த தண்ணீரில் குதித்தாம். தண்ணீரில் கரண்ட் இருந்ததால் அந்த நாய் இறந்து விட்டதாம். அந்த பத்து பதினந்து பேர்கள் உயிரை அந்த நாய் காப்பற்றியது. அந்த நாய் ஈன்றிருந்த குட்டிகளை புளூ கிராஸில் கொடுத்தார்கள் அந்த குட்டிகளை பலரும் வாங்கி சென்று விட்டனராம்.இந்த விஷயம் கேட்டு ஒரு இன்னும் 'கால்கள்' புளூ கிரஸிற்கு வருகின்றனவாம்.


ஒரு 12 வயது பள்ளியில் படிக்கும் பையன் வேறொரு பெரிய பையனோடு சேர்ந்து 17 வயது உடைய ஒரு பையனை கொலை செய்திருக்கிறான். இந்த 
பையன் தன்னோடு படிக்கும் 12 வயது பெண்ணை காதலித்திருக்கிறான் (?). 

அந்த பெண்ணோ அந்த 17 வயது பையனை காதலித்து இருக்கிறாள். இதனால்

ஆத்திரமுற்ற அந்த பையன் அந்த 17 வயது பையனை கத்தியால் குத்தி 

கொலை செய்து விட்டான். இதற்கு வேறொரு பையன் உதவி இருக்கிறான். 


இருவரும் இப்போது கைது செய்யப்பட்டு அரசாங்க சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

12 வயதில் காதல்? நினைத்து பார்க்கவே அறுவெறுப்பாக இருக்கிறது

 .பாரதி ராஜா "அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தில் இப்படி சிறுவர்கள் காதல் செய்வதை படம் எடுத்திருந்தது ஞாபகம் வருகிறது அல்லவா. நாடு கெட இந்த மாதிரி டைரெக்டர்கள் தங்கள் பங்கை செவ்வென செய்கிறார்கள்.

டெல்லி மிருக காட்ஷி சாலையில் ஒருவன் வெள்ளை புலி இருக்கும் அரணுக்குள் குதித்தான் அல்லது விழுந்தான். அந்த புலி அவன் அருகில் வந்து 10 நிமிடம் சும்மா பார்த்துக்கொண்டு இருந்தது. பின்னர் அது அவன் கழுத்தைப்பிடித்து எழுத்துச்சென்றது. கொல்லப்பட்ட அவன் உடலை எடுக்க சில நேரம் பிடித்தது. அது அவனை தின்ன வில்லை.


Comments