ஹிந்துக்களின் மத பற்று ஏன் குறைவு?



பிற மதத்தினரை விட ஹிந்துக்களுக்கு மத அறிவு, பற்று மிக குறைவு. இதனாலேயே பலரும் தங்கள் மதத்தை விட்டு மற்ற மதங்களை தேடி போய் மதம் மாறிவருகின்றனர். காதலும் இதற்கு ஒரு காரணமாக போய்விட்டது. மற்ற மத பெண்கள், ஆண்களை காதலிக்கும் ஆண்கள், பெண்கள் அந்த மதத்திற்கு மதம் மாற்றப்படுகின்றனர். ஆனால் அந்த மத பெண்களோஎ ஆண்களோ இப்படி மதம் மாறுவதில்லை. ஏனென்றால் அவர்களுக்கு தங்கள் மதத்தில் பற்று அதிகம்.

இங்கு பலருக்கும் ஹிந்து என்றால் என்ன பொருள் என்றும் பல ஹிந்துக்களுக்கு தாங்கள் ஹிந்துக்கள் என்றும் தெரிவதில்லை. அவர்களுக்கு தங்கள் தங்கள் ஜாதியும் கும்பிடும் local தெய்வங்களும் தான் தெரியும். இதனால் தான் பலருக்கும் ஹிந்துமதத்தின் தத்துவங்கள், அறிவுகள், வேதங்கள், கீதை இவற்றை பற்றி தெரியாது. இதனால் தான் அவர்கள் மற்ற மதங்களை நாடிபோய் அந்த முஸ்லீம் பள்ளிகள், தர்க்காக்கள், சர்ச்சுகளுக்கு போய் வணங்குகிறர்கள், தாயத்து கட்டுகிறார்கள், நோன்பு இருக்கிறார்கள். மற்ற எந்த மதத்தானும் இதை செய்கிறானா? இல்லை.

"இந்தஸ்" என்ற ஆற்றின் கரையில் வசித்தவரை ஹிந்துக்கள் என்று பிற நாட்டவர் சொல்ல அதுவே ஒரு மதமாக மாறிவிட்டது. இங்கு வசித்தவர்களை பின்பற்றி அவர்களின் வழி தென்றல்களும் அதே பழக்க வழக்கங்களை, கோட்பாடுகளை, சம்பிரதாயங்களை பின் பற்றியதால் அதுவே ஒரு மதமாக மாறியது. ஹிந்து மத்த்திற்கு ஒரு சிறப்பு உண்டு. அந்த ஹிந்து மத்த்தை யாரும் ஸ்தாபிக்க வில்லை, உருவாக்க வில்லை. தானே வளர்ந்து நிலைத்து நின்றது. மற்றபெரிய மதங்களை யாராவது தொடங்கி இருப்பார்கள்.மதத்தை பரப்பி இருப்பார்கள். சில மதங்கள் The power of Sword  என்ற சித்தாந்தத்தில் மக்களை பலவந்தமாக மதம் மாற்றினார்கள். இந்தியாவிலும் இஸ்லாம் இப்படி முஸ்லீம் அரசர்கள் காலத்தில் பரப்பப்பட்டது. இப்போதும் கிறிஸ்தவ மதம் ஹிந்துக்களை மதம் மாற்றிக்கொண்டு தான் இருக்கிறது. ஹிந்துக்களின் ஜாதி கூட இதற்கு ஒரு காரணம். சில ஜாதிக்காரர்களை மிக தாழ்வாக நடத்துவதால் அவர்களும் மதம் மாறுகிறார்கள்.

ஹிந்து கோவிகளில் இருக்கும் பூஜாரிகள் யாரும் சரியான படிப்பில்லாதவர்கள். அவர்களுக்கு ஹிந்து மதத்தின் எந்த கோட்பாடும் தெரியாது. சில மந்திரங்கள் சொல்லி வருகின்றவர்களிடம் காசு வாங்கி பிழப்பை நட்த்துகிறார்கள். அவர்கள் பலரும் தங்களை சார்ந்த கோவிலின் பெருமை பேசுவார்களே தவிர, கீதை, ராமாயணம், மஹா பாரதம் இவற்றை பற்றியோ, வேதங்களை, இதிகாசங்களை, உபனிஷத்துக்களை பற்றி எதுவும் தெரியாது. இது தான் ஹிந்து மத்த்தின் மிகப்பெரிய குறைபாடு. இதனால் மக்களுக்கு தங்கள் சொந்த மத்த்தின் அருமை பெருமைகள் தெரியாது.

இதனால் அவர்கள் மற்ற மிக கடுமையான கோட்பாடுகளையும், கட்டுப்பாடுகள் உள்ள மதங்களை நாடிபோய் மதம் மாறுகிறார்கள். ஹிந்து மதத்தின் உயர்ந்த தத்துவங்களை புரிந்து கொள்ள முடிவதில்லை, யாரும் சொல்லி தருவதும் இல்லை. இதை தவிர பல தெய்வங்கள், அதன் வழிபாடுகள், சில போலி சாமியார்கள், அவர்கள் சொல்லும் பரிகாரங்கள் என்று ஹிந்துக்கள் வழி மாறி போய்விடுகின்றனர். பல பல கடவுள்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். இன்னும் உருவாக்கப்படுகின்றனர். பல ஏமாற்று பேர்வழிகள் தாங்களே தெய்வம் என்று கூறிக்கொண்டு பணம் பறிக்கின்றனர்.

வேறெங்கும் இல்லாத ஜாதிகள் இங்கு பல்கி பெருகி வளர்ந்து கொண்டாடப்படுகின்றன. அரசும் தன் பங்குக்கு ஜாதிகள அள்ளி அணைத்து வளர்க்கின்றன, ஓட்டு வாங்க. அகையால் ஜாதிகள் படிக்க, ஓட்டு வாங்க, வேலை வாங்க என்று பல காரணங்களுக்காக பேணப்படுகின்றன. ஜாதிகள் பணக்காரனுக்கு கிடையாது. மற்றவர்கள் தான் அதை வைத்து கொன்றும், தின்றும் வாழ்க்கை நடத்துகின்றனர். பல படித்த மனிதர்கள் கூட ஜாதி என்று வரும்போது தன் ஜாதி என்று அதன் பக்கம் போகின்றனர். ஜாதி என்பது ஒருவன் செய்யும் தொழிலிருந்து வந்தது என்பது தெரிந்திருந்தும் அதனை விட யாரும் தயாராக இல்லை.

பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் “நான் ஒருவன் செய்யும் தொழிலையும் அவனின் குணத்தையும் வைத்து நான்கு வர்ணங்களை உருவாக்கினேன் என்கிறார். அவரே “பிறப்பினால் ஒருவன் எந்த வர்ணத்தையும் சேரமுடியாது என்கிறார்.வேறோரு இடத்தில் "எவன் ஒருவன் வேறொருவன் கீழ் வேலை செய்கிறானோ அவன் சூத்திரன் என்கிறார்." இதை யாராவது ஒத்து கொள்வார்களா?

சில ஜாதிக்காரர்கள் மதத்தை தங்கள் கட்டுப்ப்பாட்டில் வைத்தது கூட ஒரு காரணம் ஆகும்.ஹிந்து மதம் அழிவது இந்த வேறுபட்ட பல ஜாதிகளினால் தான்.

Comments