ஏன் தமிழர்கள் தமிழின் மேல் அக்கறை கொள்வதில்லை?



ஏன் தமிழர்கள் தமிழின் மேல் அக்கறை கொள்வதில்லை?
காரணங்கள் பல.

தமிழ் நாட்டிலேயே தமிழர்கள் தமிழில் அவ்வளவாக அக்கறை கொள்வதில்லை. பலரும் ஆங்கில மோகம் கொண்டு தமிழில் பேசுவதையே அறவே விட்டு விட்டார்கள்.

பல தமிழர்களுக்கு 'ழ என்ற அழகான, தமிழுக்கே சொந்தமான எழுத்தை, உச்சரிக்க முடியவில்லை. ‘ழ’ வை '' என்றே சொல்கிறார்கள். “வாளை பளம், கிளவி, மொளி, குளந்தை, மளை என்று. இதை நான் பலமுறை இதைப்பற்றி எழுதி உள்ளேன். ஒவ்வொருத்தனும் சண்டைக்கு வரானே ஒழிய அதை திருத்துவதில்லை. முயன்றால் திருத்தலாம். '' உச்சரிக்கும்போது நாக்கு வாயின் மேல் பக்கத்தை தொடவேண்டும் கீழே வரக்கூடாது '' போல.

 என்னிடம் இஞ்சினியராக இருந்த ஒரு கோயம்பத்தூர் பெண் 'பளம்' என்று சொன்னதை நான் கேலி செய்ததால் அன்று மதியமே அவள் திருத்திக்கொண்டு 'அழகாக '' என்று சொல்லிவிட்டாள். மலயாளத்தில் '' வை தமிழில் இருந்து கடன் வாங்கி அழகாக பேசுகிறார்கள். தமிழில் மட்டும் உள்ள இந்த எழுத்தை "தமிளர்கள்" தான் மிக கேவலமாக உச்சரிக்கிறார்கள். இதே போலத்தான் '' வை எல்லோரும் '' என்று உச்சரிக்கிறார்கள். “புலி=புளி, கால்=காள், கல்=கள், வலி = வளி. இது பற்றி கவுண்டமணி-செந்தில் ஜோக் கூட உள்ளது. ( புளி வருது. எங்கே வருது அதை நான் சுடப்போறேன். அப்போது புளி புளி என்று கத்திக்கொண்டு ஒருவன் புளி விற்க வருகிறான். புலிக்கும் புளிக்கும் வித்தியாசம் தெரியாத மக்கள்).

தென் தமிழ் நாடு, மேற்கு தமிழ் நாட்டில் இது சகஜம். இது போல தான் 'ன' க்கு பதிலாக 'ண' உப்யோகிப்பது. மனம் / மணம்.

பலருக்கும் தாங்கள் பேசுவது தவறு என்றே தெரியாது. ஒருமுறை நான் DRDL, Hyderabad   இல் பணி செய்தபோது என்னுடன் இஞ்சினியராக இருந்த கோவிந்தசாமி என்பவன் 'பளம்' என்று சொன்னதை நான் திருத்த முயன்றபோது அவனுக்கு கோபம் வந்து “நீ சொல்வது தான் தவறு என்று சண்டைக்கு வந்து விட்டான். 

ஒரு தமிழ் பேராசிரியர் ஞானசம்பந்தன் என்பவர் இப்படிதான் '' வை '' என்றே வெட்கமில்லாமல் சொல்கிறார். இவர் பட்டிமன்றம், சினிமாவில் பேசுவதை பார்க்கலாம். இவர் கமல ஹாசனுக்கு நண்பராம் ! நன்கு தமிழ் பேசும் கமலஹாசன் ஏன் இந்த ஆசாமியை திருத்தவில்லை என தெரியவில்லை. கேட்டால் மதுரை “ஸ்லாங்க் என்பார்கள். என்ன தான் ஸ்லாங்க் ஆனாலும் ஒரு மொழியயை கொலை செய்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இப்படி பட்டவர்கள் தமிழ் சொல்லிகொடுத்தால் எப்படி பிள்ளைகள் நல்ல தமிழ் படிப்பார்கள்?

எழுத்துக்கள் மாறும்போது பொருள் மாறுகிறது. தவறான அர்த்தம் வருகிறது. கீழே தந்திருக்கும் வார்த்தைகளை கவனிக்கவும்.

அழி: destroy  அளி: give
விழி: eye   விளி: call
கழி : reduce, minus       களி: happy etc

கல் : stone     கள் : toddy
புலி : tiger      புளி : tamarind

மனம் : Mind     ணம் : smell

இப்படி உச்சரிக்கும் போது வரும் தவறுகளை அப்படியே எழுதினால் தான் தவறு புரியும். ஒருமுறை FACE BOOK இல் ஒர் தஞ்சாவூர் காரர், ரெயில்வேயில் பணி செய்தவர்  தவறாக பேசுவதில் தவறில்லை என்று என்னை “மூடன் என்று எழுதினார். யார் மூடன் என்பது தமிழ் அறிந்தவர்களுக்கு புரியும். தவறை சுட்டிக்காட்டினால் ஒவ்வொருவருக்கும் வரும் கோபத்தை பார்த்தால் தான் தெரியும், எவ்வளவு ஆவேசமாக அவர்கள் தங்கள் தவறை ஏற்றுக்கொள்ள மறுப்பதை.

இதற்கு காரணம்

1.பெரும்பான்பையான தமிழர்க்கு தமிழ் உச்சாரணம் தெரியாது.
2.பலருக்கும்  தமிழ் மேல் பற்று இல்லை.
3.தமிழில் பேசுவதை குறைச்சலாக நினைப்பது. ஆங்கிலத்தில் பேசினால் தான் மதிப்பு என்ற தவறான எண்ணம்.
4. சுமார் 800 வருடங்களுக்கு முன் களப்பிரர் என்ற திருட்டு கூட்டம் பாண்டிய நாட்டில் படை எடுத்து இங்குள்ளவரை அடிமைப்படுத்தி தமிழ் மொழியை தங்கள் மொழியால் அடக்கி ஆண்டனர். அதன் பின் விஜய நகர சாம்ராஜியத்தின் பிரதி நிதிகள் அங்கு வந்து கோலோச்சினார்கள். இப்போது தெலுங்கு பேசும் மக்கள் மிகுந்த பூமி தென் பாண்டி நாடு. இதன் பின் திப்பு சுல்தான் தன் படைகளுடன் வந்து ஆக்கிரமித்தான். இப்படித்தான் மூன்று தமிழ் சங்கங்களை தோற்றுவித்த மதுரை  தன் மொழியை இழந்து இப்போது 'மகா கேவலமாக தமிழ் பேசும்' பூமி ஆகி விட்டது. அதை தமிழ் படங்கள் இன்னும் கேவலப்படுத்தி 'தமிழ் slang' என்று பெருமை பேசுகின்றனர். உலகில் எல்லோரும் அம்மா என்பதை “அம்மா, மா என்றே சொல்லும்போது இந்த மக்கள் மட்டும் "ஆத்தா' என்கின்றனர். வழி என்பதை கேரளாவில் வந்து 'வளி' என்று சொல்ல மலயாளிகள் சிரிக்கின்றனர். வளி என்றால் “குசு என்று மலயாளத்திலும், காற்று என்று சுத்த தமிழிலும் சொல்வார்கள். பல மலயாளிகள் என்னிடம் தமிழையும், தமிழனையும் மிக கேவலமாக பேசி உள்ளார்கள். தமிழன் கருப்பன், குளிக்க மாட்டான், மக மோசமாக பேசுவான் என்றெல்லாம் கூறுவார்கள். இதற்கு ஒரு காரணம் இவர்களின் தமிழ் உச்சாரணம் தான். தவிர மலயாளத்தில் மிக சிறந்த, நல்ல தமிழ் சொற்கள் நன்கு பேசப்படுகின்றன. இப்படி தவறாக பேசும்போது அவர்களுக்கு தமிழன் மேல் நல்ல எண்ணம் வருவதில்லை.
5. தமிழ் நாட்டில் மற்ற மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் மிக அதிகம். தெலுங்கு பேசுபவர்கள் முதலிடம் வகிக்கிறார்கள். இவர்கள் சென்னை முதல் கன்யாகுமாரி வரை உள்ளார்கள். கன்னடர்கள், மராட்டிகள், மலையாளிகள், சௌரஷ்டிரர்கள், இன்னும் பல வட நாட்டார்கள் என பல்கி பெருகி இருக்கிறார்கள். இதனால் தான் தமிழர்கள் சிறு பான்மையாகி போவதுடன் தமிழில் அக்கறை, பற்று இல்லாமல் போய் விட்டது.
6. பல பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை ஆங்கில பள்ளிகளிலும் மற்ற ஹிந்தி பள்ளிகளிலும் சேர்த்தமையால் தமிழ் ஆர்வம், பற்று பலருக்கும் இல்லாமல் போய் விட்டது.
7. ஆங்கிலத்தில் பேசினால், படித்தால் தான் பெருமை என்ற எண்ணத்தில் பலரும் தப்பும் தவறுமாக ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்.( சாங் ,ஆண்ட், பட், இப்படி ஆங்கிலத்தில் பேசி இடையில் கொஞ்சம் தமிழ் பேசுவார்கள்).
8. தமிழில் படித்தால் நல்ல/ அதிக மதிப்பெண்கள் கிடைக்காது என்று ஆங்கிலத்தையும் மற்ற மொழிகளையும் தேர்ந்தெடுத்து படிப்பவர்கள் உள்ளனர்.(நான் படிக்கும் போது தமிழ் வாத்தியார்கள் தங்கள் சாமர்த்தியத்தை காட்ட மிக குறந்த மதிப்பெண்களே கொடுத்தனர்.)
9. இன்னும் சிலர் தமிழ் மேல் கொண்ட வேறுப்பால் தமிழை படிப்பதில்லை. இது சில ஜாதியை சேர்ந்தவரிடம் அதிகம் காணலாம்.

ஆக யாருக்கும் ஒரு கூச்சமில்லாமல் தவறாக பேசி, சிலர் எழுதியும் வருகிறார்கள்.

இது மாற மக்களுக்கு தங்கள் மொழி என்ற பற்று வரவேண்டும். அதனை சரியாக உச்சரிக்க வேண்டும் என்ற உணர்வு வர வேண்டும். மற்ற மொழி பேசும் மக்களுக்கு இருக்கும் மொழி பற்று தமிழர்களுக்கும் வர வேண்டும். மலயாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள், ஹிந்திகாரர்கள் இவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டும். கற்றுகொள்வார்களா?

Comments

  1. நீங்கள் கூறுவது உண்மை. நான் படிக்கும் போதும் தமிழாசிரியர்கள் எவ்வளவு எழுதினாலும் முழு மதிப்பெண் தருவதில்லை. பதிவு நன்கு உள்ளது. தொடருகிறேன். nparamasivam1951@gmail.com

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா. உண்மை தான். இதனாலேயே பலரும் மற்ற மொழி பாடங்களை படிக்கிறார்கள்.

      Delete

Post a Comment

Popular Posts