இது ஒரு புற நானூற்று பாடல் பாடல் என் நினைக்கிறேன். நான் பள்ளியில் படிக்கும்போது படித்தது.


//நாராய் நாராய் செங்கால் நாராய்

பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயும் நின் பெடையும், தென் திசைக்கு மரியாடி
வடதிசைக்கு ஏகுவீராயின்
எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
பாடு பாத்திருக்கும் எம் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே//

நான் பத்தாவது வகுப்பு திருவநந்தபுரத்தில் படிக்கும் போது புற நானூறில் இருந்து ஒரு செய்யுளை ஆசிரியர் படித்து பொருள் சொன்னார். மன்னன்  பாண்டியன் நெடும்செழியனை காண மிக வரிய நிலையில் இருந்த ஒரு புலவர் மிக தூரத்தில் இருந்து பாடி பொருள் ஈட்டலாம் என்று வந்து காத்திருந்தார்.
அரண்மனை காவலர்கள் அவரை மன்னனை காண அனுமதிக்க வில்லை. கடும் குளிரில் ஆடையின்றி வாடையில் மெலிந்து அரண்மனை வாயிலில் படுத்திருக்கிறார் புலவர்.
அப்போது ஒரு நாரை கூட்டம் வானத்தில் பறந்து செல்கிறது. இதைக்கண்டு புலவர் பாடுகிறார்.
நாரைகளே நாரைகளே, சிவந்த கால்களை கொண்ட நாரைகளே, பனை மரத்தின் கிழங்கை பிளந்தது போல் இருக்கும் கூர்மையான வாயுடைய நாரைகளே நீயும் உன் மனைவியும் தென் திசை இன்றி வட திசை போய் அங்கு சக்தி முத்த வாவியில் இருக்கும் என் குடிசையில் படுத்திருக்கும் என் மனைவியிடம் எங்கோ இருக்கும் பாண்டிய அரசன் அரண்மனை வாசலில் ஆடை இல்லாமல் குளிரில் விறைத்து, கைகளால் ‘மெய்யை பொத்தி கூடையில் இருக்கும் பாம்பைப்போல் படுத்திருப்பதை சொல்வாய் என்கிறார்.

மேல் மாடத்தில் இரவில் உலவி வரும் பாண்டிய அரசன் இந்த பாடலை கேட்டு, இந்த அழகிய பாடலை பாடியது யார் என்று காவலர்களை கேட்க. அவர்கள் சென்று பார்த்து ஒரு வயோதிய புலவர் அரண்மனை வாசலில் குளிரில் விரைத்து, கூனி, குறுகி படுத்திருப்பதைப்பார்த்து அவரைப்பற்றி அரசனிடம் சென்று சொன்னார்கள்.
அரசன் புலவரை அழைத்து வர சொல்லி, காக்கவைத்த்திற்கு வருந்தி பரிசுகள் பல அளித்து வாழ்த்தி வழி அனுப்பினான் என்கிறது கதை.

Comments

  1. மிகவும் அருமை. ரசித்துப்படித்தேன். இளமைக்கால வகுப்பறை ஞாபகம் வந்தது. நன்றி.

    ReplyDelete
  2. இந்தப் பாட்டு என்னை பள்ளி நாட்களுக்கு அழைத்து சென்று விட்டது. என் தமிழாசிரியரும் என் கண் முன்னே நிழலாடினார். நன்றி பகிர்விற்கு.

    ReplyDelete
  3. ஒரு சின்ன விண்ணப்பம். இந்த word verificationஐ நீக்கி விட்டால் கமெண்ட் எழுத சுலபமாக இருக்கும்.

    ReplyDelete
  4. நன்றிகள். இந்த கமெண்ட் 14ஆம் தேதி வருவது இன்னும் மகிழ்சியை கொடுத்தது. அன்று என் பிறந்த நாள்.
    word verification என்னவென்றுபுரியவில்லை. மாற்ற முயற்சிக்கிறேன்

    ReplyDelete

Post a Comment