நான் ரசித்த காமடி காட்சிகள்.




சபாபதி என்ற படத்தில் காளி N. ரத்தினம் என்ற காமடி நடிகர் நடித்திருப்பார். அவருடன் சேர்ந்து டி.ஆர்.ராமச்சந்திரன் காமடி பண்ணுவார். குள்ளமாக இருக்கும் ராமச்சந்திரன் எப்போதும் ஆங்கிலத்தின் தான் பேசுவார். அவர் ரத்தினத்தை அழைத்து போய் சோடா உடைத்து வாங்கி வா என்பார். கொஞ்ச நேரம் கழிந்து ரத்தினம் ஒரு பையுடன் வருவார். இவர் “எங்கேடா சோடா? என்பார். ரத்தினம் பயை கவிழ்த்து உடைந்த சோடா பாட்டில்களை கீழே கொட்டுவார். ராமச்சந்திரன் “ஏண்டா இப்படி செய்தாய் என்று கேட்க ரத்தினம் “நீதான்பா உடைச்சு வாங்கீட்டு வான்னே என்பார்.

நீலவானம் என்ற படத்தில் சிவாஜி ரொம்ப ஏழை. அவரை பணக்காரியான தேவிகா தன் பிறந்த நாள் பார்ட்டிக்கு அழைப்பார். சிவாஜியிடம் நல்ல சட்டை இருக்காது ஆகையால் பார்ட்டிக்கு போகாமல் இருக்கலாம் என்று நினைப்பார். ஆனால் கூட இருந்த நண்பன் பேசாமல் என் கோட்டை போட்டுக்கொண்டு போ, சட்டை இல்லாதது யாருக்கும் தெரியாது என்பான். சிவாஜியும் கோட்டு போட்டுக் கொண்டு போவார். அங்கு ஒரு செயின் திருடு போய் விடும். எல்லோரையும் “செக் செய்வார்கள். சிவாஜி அதற்கு மறுப்பார். அவர் தான் திருடி விட்டார் என்று பலவந்தமாக அவர் கோட்டை அவிழ்ப்பார்கள். உள்ளே சட்டை இல்லாமல் இருப்பதை பார்த்து  எல்லோரும் சிரிப்பார்கள். பாவம் சிவாஜி அவமானப்பட்டு வெளியேறுவார்.

எங்கள் வீட்டு பிள்ளை என்ற பட்த்தில் MGR சரோஜாதேவி வீட்டில் இருப்பார். அப்போது அங்கு வந்த நம்பியார் அவரை தன் வீட்டுக்கு அழைத்துப்போவார். அப்போது சரோஜாதேவி MGR இடம் போய்ட்டு வந்திடுங்க என்பார். MGR அதற்கு “போன உடன் வந்திடறேன் என்பார்.

சர்வர் சுந்தரம் படத்தில் நாகேஷ் கெ.ஆர்.விஜயாவிடம் “ நீங்க என்ன படிக்கிறீங்க? என்பார். அதற்கு விஜயா “நாங்க பீ.ஏ நீங்க? என்பார்.  அதற்கு நாகேஷ் நானும் பீ.ஏ இனிமே தான் படிக்கணம் என்பார்.

கலாட்டா கல்யாணம் படத்தில் சிவாஜி ஜெயலலிதாவை பார்க்க மானேஜரிடம் பெர்மிஷன் கேட்பார். மானேஜர் பெர்மிஷன் தராமல் ஒரு குறிப்பிட்ட கம்பனி மானேஜரை பார்க்க சொல்வார். சிவாஜி தன் சீட்டுக்கு வந்து அங்கு உட்கார்ந்திருந்தவரிடம் “அந்த மானேஜர், திருடன், ரவுடி, பொறுக்கி அவனைப்போய் நான் ஏன் பார்க்கணம் என்று சொல்லியபடி நீங்க யார் சார் என்பார்? அவர் “நான் நீங்க இவ்வளவு நேரம் திட்டினீர்களே அந்த மானேஜர் நான் தான் என்பார்.

ஒரு படத்தில் கவுண்ட மணி நாவிதர். செந்தில் அவர் தம்பி. கவுண்ட மணி விஜயகுமாருக்கு ஷேவ் பண்ணிக்கொண்டிருப்பார். அவர் கழுத்தில் கத்தி வச்சு ஐயாயிரம் ரூபாய் கடன் கேட்பார். அவர் கொடுக்க மாட்டார். அப்போது செந்தில் வந்து அவருக்கு லாட்டரியில் 15 லக்ஷம் பணம் கிடைத்திருப்பதாக சொல்வார். கவுண்டமணி மகிழ்சியில் கத்திக்கொன்டிருப்பார். விஜய குமார் அவரிடம் “ சோப் காஞ்சுபோகுது சீக்கரம் முடி என்பார். கவுண்டமணி அவரிடம் “என்ன நினைச்சே, நானும் லட்ஷாதிபதி தான் இப்பொ, நான் கேட்டபோது பிச்சை காசு 5000 தரமாட்டேன்னியே இப்பொ நான் தரேன் பார் ஒரு லட்ஷம் எடுத்துக்கோ என்பார். அப்போது மனோரமா உள்ளிருந்து வந்து “ஏ செங்கோட உனக்கு என்ன பைத்தியம் கிய்த்தியம் பிடிச்சிருக்கா இப்படி பேசுரேயே என்பார். உடன் கௌண்டமணி “என்னா ஜக்கம்மா என்பார். மனோரமா என்னடா பேர் சொல்லி கூப்பிடறே என்பார். அதற்கு கவுண்ட மணி ‘ஏன் உன் பேரு ஜக்கம்மா தானே இல்லே பொக்கம்மாவா? பெயரை சொல்லி கூப்பிடதானே பெயர் வச்சிருக்கு. இனிமே என்னை அவன் இவன் ன்னு சொல்லக்கூடாது. அவ்ர்ர்ர்ர்ர்,இவர்ர்ர்ர்ர் ன்னு தான் சொல்லணும் என்பார்.

ஒரு படத்தில் ஒரு செருப்பு தைப்பவன் செருப்பு தைத்துக்கொண்டிருக்க அவன் பக்கத்தில் ஒரு பெண் அமர்ந்திருப்பாள். அதைப்பார்த்து அங்கு வரும் வடிவேலு “ஆஹா பொண்டாட்டியோடு உட்கார்ந்துதொழில் பண்ணுறேயே என்பார். அந்தப்பெண் எழுத்து டேய் பொறுக்கி என் செருப்பு கிழிந்து போய் விட்டது என்று தைக்க வந்தால் என்னை அவன் பொண்டாட்டிண்ணு சொல்வாயா என்று அடிக்க போவாள் அத்துடன் செருப்பு தைப்பவனை பார்த்து “என்னா இளிக்கிறே சந்தோஷமா அதைக் கேட்டு என்பாள்.

ஒரு பழைய படத்தில் “பணமா பாசமா அல்லது சவேலே சமாளியா என்று நினைவில்லை ( டி.கெ.பகவதி பஞ்சாயத்து பிரசிடென்ட், நாகேஷ் துணை பிர்சிடென்ட். அப்போது பகவதி வெறுப்புடன் “இந்த நாற்காலியை விட ப்போரேன் இனிமே நீ தான் இதில் உட்காரவேண்டும் என்பார் நாகேஷிடம். அதற்கு நாகேஷ் “அய்யய்யோ மாட்டேன். நீங்க உட்கார்ந்த நாற்காலியில் நானா, அது சுடும் என்பார்.

ஒரு படத்தில் வடிவெலு பேய் பிடித்த்வர் போல் கத்திக்கொண்டிருப்பார். யரோ ஒருவன் கறிக்கடைக்கரன் பொண்டாட்டியுடன் ஓடிப்போய் செத்துபோனவன் பேய் பிடித்ததாக அவரின் நண்பன் சொல்வான். திங்க ஏராளம் பொருள்கள் கேட்டு வாங்குவார். அப்போது அந்த பேயின் மனைவி என்டு சொல்லி ஒரு பெண் வந்து அவரை அடித்து மிதிப்பாள், தன்னையும் தன் குழந்தைகளையும் அனாதையாக விட்டு விட்டு போய் விட்டதாக கூறி. அப்போது அந்த கறிக்கடைக்காரனும் அங்கு வருவான். பேயிடம் (வடிவேலுவுடன்) அவன் தன் பெண்டாட்டி எங்கே என்பான். வடிவேலு அவனிடம் “ அவ வரல்லே அவளிக்கு பதிலா இவளை வச்சுக்கோ என்று அந்த பெண்ணைக்காட்டி விட்டு ஓடிப்போவார்.

ஒரு படத்தில் செந்தில் உட்கார்ந்து ஒரு கொட்டையை தரையில் தேய்த்துக்கொண்டிருப்பார். அப்போது அங்கு வரும் கவுண்ட மணி “ஏண்டா கொமுட்டி தலையா என்னடா தேய்க்கிறே என்பார். அண்ணே இது சுடு கொட்டை அண்ணே என்பார் செந்தில்.கவுண்டமணி “அதே என்னடா பண்ணுவே ன்னு கேட்க “இப்ப பாருங்க ன்னு சொல்லிட்டே அந்த சுடு கொட்டையை அவர் தொடையிலே செந்தி வைப்பார். வைத்த இடத்தில் புகை வர கவுண்ட மணி “அய்யோ, அம்மா என்று அலறுவார்.

இன்னொரு படத்தில் ஒரு பொருட்காட்சியில் காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கும் வேலை கவுண்டமணி, செந்தில், வடிவேலு செய்வார்கள். அப்போது ஒரு பெண் வந்து தன் கணவனை காணவில்லை என்பாள். இவர்கள் மைக்கில் “அய்யா ராமய்யா உன் பொண்டாட்டி இங்கே உன்னை காணவில்லை ண்ணு வந்திருக்கா. உடனே வந்திரு ராமய்யா. ராத்திரி அவள் மேலே காலை போட்டு தூங்குவாயாம் ராமய்யா அதைக்கூட மன்னித்திருவாங்க ராமய்யா, ராமய்யா சர்தான் அய்யா, ராமய்யா சர்தான் அய்யா, மனதிலே குஜுகுதியா என்றெல்லாம் இஷ்டம் போல கத்த அந்த புருஷன் “டேய் கத்தாதீங்க டா, டேய் கத்தாதீங்க டா  ண்ணு சொல்லி வருவான். கவுண்ட மணி “ஒவ்வொருவரா போய் பணம் வாங்குங்க என்று சொல்ல முதலில் செந்தில் அவனுடன் உள்ளே போக அவன் “டேய் இந்த பொம்பளையை கட்டுன நாளா பேசிக்கிட்டே இருக்கிறா. அவ பேச நான் கேட்க , இத்தனை நாள் கஷ்டம் தாங்காமல் தான் இங்கே கொண்டு விட வந்தேன், அவ கூட ஒரு நாள் உன்னால் இருக்க முடியாது என்பான். செந்தில் “ஒரு சந்தர்ப்பம் கொடுத்து பாருங்க என்பார். அவன் “அவளை போய் இங்கே விட்டு விட்டுபோக பார்த்தால் இப்பிடி கண்டு பிடிச்சு கொடுத்துட்டீங்களே என்று சொல்லி செமையா அடிப்பான். வெளியே வரும் செந்தில் கவுண்ட மணி “என்ன ஆயிற்று என்று கேட்க செந்தில் “அண்ணே அண்ணே என்று மாத்திரம் சொல்ல கவுண்ட மணி உள்ளே போய் இன்னும் செமத்தியாக வாங்குவார். அவன் வெளியில் வந்து “வாடீ என்று மனைவியை அழைத்துக்கொண்டு போவான். அப்போது அங்கு வரும் வடிவேலு “எனக்கு கிடைக்க வேண்டியதை கொடுங்க, இப்படி நீங்க மாத்திரம் வாங்குறது நல்லா இல்லை என்று கேட்க இவர்கள் இருவறும் சேர்ந்து வடிவேலை மொத்துவார்கள்.

Comments