பொருள் தெரியாமல் பிற மொழியில் பாடுவது



நாங்கள் ரொம்ப சின்ன பசங்களாக இருந்தபோது திருவனந்தபுரத்தில் எங்கள் அக்காளுக்கு வீணை, வாய் பாட்டு சொல்லிக் கொடுக்க ஒரு மாமி வருவாள்.
லம்போதரா லகுமீக ரா....
வாதாபதி கணபதிம்...
நின்னுக்கோரி...
எந்தரோ மஹானுபாவா....
இப்படி ஏகப்பட்ட தெலுங்கு, சமஸ்கிருத கீர்த்தனைகளை பாடி அக்காவிற்கும் சொல்லித்தருவாள். அக்கா அவற்றை கர்ம சிருத்தையாக ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதி படிப்பாள்.

நங்களும் கூட உட்காந்து பாடுவோம். ஒன்றுமே புரியாமல். இதில் விசேஷம் என்னவென்றால் சொல்லித்தரும் சரோஜா மாமிக்கும் அவ்ற்றின் பொருள் தெரியாது படிக்கும் அக்காவிற்கும் பொருள் தெரியாது. பொருள் தெரியாத ஒரு பாட்டை இஷ்டத்திற்கும் பாடி மகிழ்கிறார்கள் நம் மக்கள்.

தியாகய்யர் அல்லது தியாகராஜ ஸ்வாமிகள் ஒரு தெலுங்கர். அதாவது தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர். அவர் பக்தி வசப்பட்டு தன் தாய் மொழியில் பாடியது தான் தியாக ராஜ கிருதிகள். இதேபோல் திருவிதாங்கூர் ராஜ வம்ஸத்தில் வந்த ஸ்வாதித் திருநாள் மஹாராஜா பல சமஸ்கிருத கீர்த்தனைகள் இயற்றி, இசை அமைத்து பிரபல பாடகர்களை அழைத்து அவற்றிப் பாடி பிரபல படுத்தினார்.  நவராத்திரி, சரஸ்வதி பூஜை சமயங்களில் திருவனந்தபுரம் பத்மனாப ஸ்வாமி கோயிலில் நவராத்திரி மண்டபத்தில் பல பிரபல பாடகர்கள் வந்து இவர் இயற்றிய கீர்த்தனைகளை பாடி வந்தனர். தமிழில் கீர்த்தனைகள் இருந்தனவா என்று தெரியாது. ஆனால் பழங்காலத்தில் தவாரம், திருவாசகம் இவற்றை பண்ணோடு பாடி வந்த பாணர்கள், கொவில்களில் பாடி வந்த ஓதுவார்கள், தேசிகர்கள் இருந்தனர். அண்ணாமலை பல்கலை கழக பேராசிரியர் தண்டபாணி தேசிகர் நிறைய தமிழ் பாடல்களை இசை அமைத்து பாடி உள்ளார். “தாமரை பூத்த தடாகமடி என்ற அவருடைய பாடல் பிரசத்தி பெற்றது.

இப்படி பொருள் தெரியாமல் பாடுவதைதான் பாலசந்தர் தன் படம் சிந்து பைரவியில் காட்டியிருப்பார். பொருள் தெரிந்தால் தான் பாவம் (expression) வரும்.

நான் ஹைதிராபாதில் வேலை செய்யும் போது ஒரு தெலுங்கு பெண் “தெலுங்கு சுந்தர மொழி, தமிழ் ஒரு டப்பாவில் கல்லை போட்டு ஆட்டின மாதிரி இருக்கும் என்றாள். எனக்கு கன கடுப்பு. நான் சொன்னேன் “எனக்கும் தெலுங்கு கேட்டால் டப்பா குலுக்கின மாதிரி தான் இருக்கிறது. அவன் அவனுக்கு அவன் மொழி இனிமையாக இருக்கும் என்று. பின்னர் அவளைக்கண்டாலே பேசுவதில்லை.

 பாரதி தெலுங்கை சுந்தர மொழி என்று எழுதியதன் காரணம் அந்த தியாகராஜா அய்யரின் கீர்த்தனைகள் தான் காரணம். எல்லா மொழியும் அவர் சார்ந்த மக்களுக்கு இனிமையாகத் தான் இருக்கும்.

Comments