சீவக சிந்தாமணி. ஐம்பெரும் காப்பியங்களில் முதன்மையான ஜீவக சிந்தாமணி

ஐம்பெரும் காப்பியங்களில் முதன்மையானது ஜீவக சிந்தாமணி. திரு .வெ.சாமினாத அய்யர் என்ற தமிழ் தாத்தாவின் அரும் பெரும் முயற்சியால் கண்டுபிடிக்கபட்ட ஒரு அற்புதமான நூல் இது. ஜீவக சிந்தாமணி 3145 பாடல்களைக்கொண்டது. இதன் மூலம் ஒரு வட மொழி கதை. சிந்தாமணி என்றால் எதையும் தரும் ஒரு மாணிக்கக்கல் என்று பொருள். தமிழின் முதல் காப்பியமாக இதனை கருதுவர்.

ஜீவக சிந்தாமணி திருத்தக்க தேவர் என்பவரால் எழுதப்பட்டது. ஜைன மதத்தை சேர்ந்தவாரான இவர் எழுதிய காப்பியம் தான் ஜீவக சிந்தாமணி. 

ஒருமன்னன் தன் ஆட்சிப் பொறுப்புகளை கண்டுகொள்ளாமல் எப்போதும் தன் மனைவியான அரசியுடன் காம சுகத்தில் ஈடுபட்டு அரசை, ஆட்சியை தன் மந்திரி ஆன கட்டியக்காரனிடம் கொடுத்து விட்டதால் நேர்ந்த கதி தான் இதன் சாரம்.

அரசன் ஏமாந்து இருக்கும் தருணத்திற்காக காத்திருக்கும் கட்டியக்காரன் ஒரு நாள் தன் படையுடன் அரசனை கொலை செய்ய அரண்மனையை சூழ்ந்து கொள்கிறான். ஏமாந்து போன அரசன் தன் சூலுற்றிருக்கும் மனைவியை முன்பே ஒரு கை தேர்ந்த தச்சனால் செய்து வைக்கப்பட்டிருந்த அன்னப்பறவையில் தப்புவிக்கிறான். கட்டியக்காரன் அரசனை கொன்று தானே அரசனாகிறான்.

ஒரு சுடுகாட்டில் மயங்கிய நிலையில் இறங்கும் அரசி அங்கு ஒரு ஆண் குழந்தையை ஈன்று எடுக்கிறாள். அவளை ஒரு வணிகன் தன் வீட்டிற்கு அழைத்து சென்று மகள் போல் வளர்த்து வருகிறான். அரசியின் குழந்தை ஜீவகன் வளர்ந்து அழகிய வாலிபனாகிறான். கல்வி கேள்விகளில் தேர்ந்து வீண வாசிப்பதில் விற்பன்னனாகிறான்.

பல பெண்கள் அவன் அழகில் மயங்கி அவனை மணம் செய்து கொள்கின்றனர். திருமணமே வேண்டாம் என்றிருந்த சுரமஞ்சரி என்ற பெண் இவனது வீணை வாசிப்பதை கேட்டு மயங்கி இவனை மணந்து கொள்கிறாள். பின்னர் போர்,படை நடத்தும் முறை இவற்றை  கற்று தேர்ந்து பல மனைவிகளின் பண, படை பலத்தையும் சேர்த்துக்கொண்டு கட்டியக்காரனை போரில் வென்று அரசனாகிறான்.

முப்பதுஆண்டுகள் ஆட்சி செய்த ஜீவகன் பின்னர் தன் மகனுக்கு பட்டம் கட்டி விட்டு ஜைன மத கோட்பாடுகள், தத்துவங்களை கற்று, துறவறம் பூண்டு வனம் செல்கிறான்.




Comments